யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் அதிரடி கைது.. மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர், வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (08.11.2025) காலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர், செலுத்தி சென்ற காரினை பொலிஸார் தடுத்துள்ள போதும் அவர் காரை நிறுத்தாமல் சென்றமையால் அதிகாரிகள் வாகனத்தை விரட்டி சென்று பிடித்துள்ளனர்.
விரட்டி சென்ற பொலிஸார்
இதன்போது, காரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு கைத்துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் குறித்த துப்பாக்கியை மற்றுமொரு நபருக்கு கையளிக்க கொண்டு சென்றதாக தெரிவித்த நிலையில், பொலிஸார் அந்நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam