இந்திய மீனவர்களின் உயிரிழப்பு குறித்து இதுவரையில் பதிலளிக்காத இலங்கை
இலங்கையின் கடற்பரப்பில் நான்கு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்தியாவின் கடும் அறிக்கைக்கு இலங்கை இன்னும் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.
இலங்கையின் வடக்கு நெடுந்தீவு கடலில் இந்த நான்கு மீனவர்களும் அண்மையில் உயிரிழந்தனர்.
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு கடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு நாடுகளும் இணங்கிக் கொண்டபடி மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்ற விடயம் நினைவூட்டப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் எந்தவொரு எதிலும் வெளியிடப்படவில்லை என்று இலங்கையின்வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பு, இந்திய வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்ட அதேநேரம் புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரிடமும் கையளிப்பட்டது.
குறித்த சம்பவத்தில் மூன்று இந்தியர்களும் இலங்கையில் இருந்து அகதியாக சென்று இந்திய மீன்பிடிப்படகில் தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையருமே நீரில் மூழ்கி மரணமாகினர்.
இந்தநிலையில் அவர்களின் சடலங்கள் இந்திய கரையோர பொலிஸாரிடம் நேற்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.