இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தயாரில்லை - ஜனாதிபதி
இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (23.11.2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டங்கள்

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை எனவும், இலங்கையர்களாகிய நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் லலித் அத்துலத்முதலி பெயரில் முதுகலைப் பட்டப்படிப்பை கற்கக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri