புலம்பெயர் ஈழத்தமிழர்களை குறி வைக்கும் இலங்கை அரசு - லண்டன், பாரிஸில் நடவடிக்கை
புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளதாக, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக லண்டன், பாரிஸ் நகரை சேர்ந்த மக்களை சந்திக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் செயற்பட்டு வரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம், முதற்தடவையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்க திட்டமிட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு
நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்கள் திரட்டப்படுகின்றன.
புலம்பெயர் தமிழர்கள்
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாகத் திரட்டிவருவதாகவும், அவர்களுடனான முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வாரம் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களில் வாழும் இலங்கையர்களிடம் தகவல்கள் திரடப்படவுள்ளன.
இந்த சந்திப்புக்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என மூவினங்களைச் சேர்ந்த இலங்கையர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri