பரீட்சைகளை நடத்தும் காலம் தொடர்பிலான சிக்கலுக்கு தீர்வு
கோவிட் காரணமாக பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதி தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சங்கரீலா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நாம் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பிலான சங்கங்களை உருவாக்க உள்ளோம். AI தொடர்பிலான சட்டத்தையும் கொண்டுரவுள்ளோம். செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான ஆய்வுகளுக்காகவும் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்.
நாம் கல்வி கற்ற காலத்தில் அரச பாடசாலைகள், தனியார் மற்றும் உதவிகளைப் பெற்று இயங்கும் பாடசாலைகள் என பல பிரிவுகள் இருந்தன.
துரதிஷ்டவசமாக நீங்கள் அனைவரும் அரசாங்க பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் என இரு பிரிவுகளுக்குள் மாத்திரம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள்.
அதனால் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் நாட்டிற்கு சேவையாற்றிய பாடசாலைகளுக்கு உதவி செய்யும் திட்டமொன்றை முன்மொழியவும் எதிர்பார்க்கிறோம்.
கோவிட் காரணமாக பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதி தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய பல பாடசாலைகள் உள்ளன. வெஸ்லி கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு அது தொடர்பிலான பெரும் பொறுப்புகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |