அரச ஊழியர்களின் சம்பளம்: அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயத்தை போட்டுடைத்த அமைச்சர்
அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தை அரச வரி வருமானத்தில் இருந்து தான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நிலவும் பற்றாக்குறை
அவர் மேலும் கூறுகையில், நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக செலவுகளுக்கு போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு பற்றாக்குறை தொடர்ந்தும் ஏற்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.
துரதிஷ்டவசமாக அண்மைய வருடங்களில் இந்த சட்டங்களுக்கேற்ப செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
அரச ஊழியர்களின் சம்பளம்
2024 வரவு செலவுத்திட்டம் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்து தான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது.
கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri

டொனால்ட் டிரம்ப்பிற்கு இருக்கும் ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு உங்களுக்கு வருவதை எப்படி தடுக்கலாம்? Manithan
