வெளியேறும் அரச ஊழியர்களால் நிறுவனங்களில் பதவிக்கான போர் தீவிரம்
அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65அல் இருந்து 60 ஆக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக இந்த வருடத்தின் கடைசி இரண்டு வேலை நாட்களில் அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் ஓய்வு பெறறுள்ளனர்.
இந்த நிலையில்., பல நிறுவனங்களில் பதவிகளுக்கு கடும் போட்டி நிலைமை ஒன்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் சில நிறுவனங்களில் முதியவர்கள் இருந்த இருக்கைகளில் அடுத்தடுத்து அதிகாரிகள் வருவதாலும் கணிசமான முதியவர்கள் திடீரென வேலையை விட்டு வெளியேறியதனாலும் பல நிறுவனங்களின் அதிகாரிகள் பல்வேறு மோசமான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60இலிருந்து 65 ஆக நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டது, ஆனால் தற்போதைய நிர்வாகத்தால் அந்த முடிவு இரத்து செய்யப்பட்டது.
அதற்கமைய, டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெறவிருந்தவர்கள் மேலும் ஒரு வருடம் அரச பணியில் இருக்க வாய்ப்பு கிடைத்தது.
எப்படியிப்பினும், 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 60 வயதை எட்டிய அரசாங்க ஊழியர்கள் இம்முறை ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றனர்.
அதற்கமைய, இந்த ஆண்டு சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலான அரச அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற ஆண்டாக இது திகழ்வதாகவும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.