அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் எனும் பெயரிலான நிதியத்தைத் தாபிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கு, அவர்களது இளைப்பாறிய காலத்தில் அனுகூலங்களுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும், இளைப்பாறிய ஊழியர்கள் நாட்டுக்கு சுமையின்றி தமது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கும் பொருத்தமான சூழலை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
உத்தேச நிதிய வைப்பு
அதற்கமைய, அரச ஊழியர் ஒருவர் அரச சேவையில் இணைந்து கொண்ட பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் 8% வீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12% வீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு வைப்பிலிடுதல் வேண்டும்.
உத்தேச நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக முகாமைத்துவ சபையொன்றால் நிர்வகிக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்று தாபிக்கப்படுவதுடன், நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக விசேட தகைமைகளைக் கொண்ட நிதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய முறைமை எதிர்வரும் காலங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அரச ஊழியர்களுக்கு ஏற்புடையதாக அமையும்.
ஆட்சேர்ப்பு நியமனக் கடிதத்திலுள்ள ஏற்பாடு
கடந்த 2016 ஜனவரி மாதத்தின் பின் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்கள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்ற ஓய்வூதிய முறைக்கு இயங்கியொழுகுதல் வேண்டுமென்ற ஏற்பாடுகள், அவர்களின் ஆட்சேர்ப்பு நியமனக் கடிதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது சுயவிருப்பின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய சம்பள முறையுடன் இணைந்து கொள்வதற்கு அவர்களுக்கும் இயலும்.
அதற்கமைய, தேவையான ஏற்பாடுகளை இயற்றுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
