ஓய்வூதியம் மீது பாரிய சுமை! கடந்த வருடத்தை விட மோசமான நிலைக்குச் செல்லும் நாடு
அரசாங்கம் கடன் செலுத்துவதை நிறுத்தியுள்ளது, கடன் செலுத்த ஆரம்பித்தால் கடந்த வருடத்தைவிட மோசமான நிலைக்கு நாடு செல்லும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டை ஆட்சி செய்துவந்த அரசாங்கங்கள் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றிருக்கிறது. ஆனால் நாடாளுமன்ற விவாதம் நடத்தியதில்லை. ஏனெனில் அது அரசாங்கத்தின் கொள்கை. அரசாங்கத்தின் கொள்கையை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க தேவையில்லை.
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை
அதனால் தற்போது அரசாங்கம் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகிறது. மேலும் அரசாங்கம் கடன் செலுத்துவதை நிறுத்தியுள்ளது. கடன் செலுத்த ஆரம்பித்தால் கடந்த வருடத்தைவிட மோசமான நிலைக்கு நாடு செல்லும்.
கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் வருடத்துக்கு 6 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டி இருந்தது. இந்த கடனை 2029வரை வரை செலுத்த வேண்டிவரும் என தற்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் 2032வரை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது.
அத்துடன் அரசாங்கம் கடன் செலுத்துவதை தாமதப்படுத்தி இருக்கிறதே தவிர, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு செயயும்போது அது பொருளாதாரத்துக்கு பாரிய சுமையை ஏற்டுத்துகிறது. அந்த சுமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.
ஆனால் அரசாங்கம் இந்த சுமையை ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி மூலம் அப்பாவி மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதனால் நாட்டை வங்குராேத்து அடையச்செய்தவர்கள் தற்போது நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். அது சாத்தியமில்லை.
அதே நேரம் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. அதனால் ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஏதாவது ஒரு தேர்தலை மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் அரசாங்கம் தேர்தலுக்கு சென்று மக்கள் ஆணையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |