அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்
அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.
தனியார் மயப்படுத்தல்
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.
மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம். மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
