இலங்கையில் சட்டவிரோத செயல் : அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் அரச விருதுகளையும் கௌரவ நாமங்களையும் வழங்குவோருக்கு எதிராகவும் அதனை பெற்றுக்கொள்வோருக்கும் எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தேசிய விருதுகளை சட்டவிரோதமான முறையில் வழங்கும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட உரிய தரப்புகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய விருது கௌரவத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய விருது
இவ்வாறான நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் போலி பட்டங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று இவ்வாறான விருது வழங்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தியுள்ளார்.