மீண்டும் 4 இலட்சத்தை நோக்கி கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கத்தின் விலை
கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 310,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 336,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
விலை அதிகரிப்பு
இவேளை நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுண் 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 326,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதனடிப்படையில் பார்க்கும் போது நேற்றை விட இன்று தங்கத்தின் விலை சுமார் பத்தாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தை நிலவரம்
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
அதன்படி உலக தங்கத்தின் விலை 4,212 டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கடந்த முறை நான்கு இலட்சம் ரூபா வரையில் தங்க விலை அதிகரித்த போதும் தொடர் சரிவை சந்தித்து மீண்டும் 3 இலட்சம் என்ற இடத்திலேயே வந்து நின்றிருந்தது தங்க விலை. இவ்வாறிருக்கையில் இம்முறை மீண்டும் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரிப்பதானது எதிர்காலத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்பது சந்தேகமே என தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam