இலங்கையில் இன்று பதிவாகியுள்ள தங்க பவுணின் விலை
இலங்கையில் இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 294,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்த வகையில் இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராம் 39,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு செட்டியார்த்தெரு இலங்கையின் முக்கிய தங்க நகை சந்தையாகும்.
இங்கு பதிவாகும் தங்க விலைகள் உலக சந்தை, அமெரிக்க டொலர் மற்றும் ரூபா விகிதம் மற்றும் உள்ளூர் தேவையைப் பொறுத்து மாறுபடுகின்றன.
தங்க விலை மாற்றம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் நான்கு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டியிருந்தது.
இவ்வாறான சூழலில் சடுதியான வீழ்ச்சியை பதிவு செய்த தங்கத்தின் விலையானது தற்போது மீண்டும் மூன்று இலட்சம் ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        