நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல்! மகிந்த கொண்டுள்ள நம்பிக்கை
நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்றையதினம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த பெறுபேறுகள்
மேலும், தமது தரப்பினர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் எம்மோடு இணைந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த கூறினார்.
இதேவேளை, தற்போதுள்ள அரசாங்கம் சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது என்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
