கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள நிலையில் மேலும் சில உறுப்பினர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர்.
கூட்டணியில் மட்டும் அல்ல ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் உள்ளக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அஜித் மானப்பெரும தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
சஜித்தின் தலைமைப் பதவி
ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித்துக்காகப் பிரசாரம் செய்த நடிகை தமிதா, தற்போது சஜித் தரப்பை விளாசித்தள்ளி வருகின்றார். நேற்று கட்சியும் தாவினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பதவி விலக முடிவெடுத்திருந்தாலும் அவரது பதவி விலகல் கடிதத்தை சஜித் ஏற்கவில்லை.
ஹிருணிக்காவை தற்காலிகமாகச் சமரசப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை, சஜித்தின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் சில உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
கட்சியின் தலைமைப் பதவியை கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாஸ, ஹர்ஷ டி சில்வா ஆகிய இருவரும் இம்முறையும் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை எதிரணி விருப்பு வாக்குப் பட்டியலில் சஜித் முதலிடம் பிடித்திருந்தாலும் இம்முறை ஹர்ஷ டி சில்வாவுக்கே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க போட்டியிடாததால் அவரை விரும்பக்கூடிய தரப்புகள், ஹர்ஷ டி சில்வாவையே ஆதரிக்கக்கூடும். விருப்பு வாக்குப் பட்டியலில் சஜித் பின்தள்ளப்பட்டு, ஹர்ஷ முதலிடம் பிடித்தால் அது சஜித்தின் தலைமைப் பதவிக்கும் ஆபத்தாக அமையவுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
