இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் விற்பனை தொடர்பில் வெளிவந்துள்ள அறிவிப்பு
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்களை இணையவழி மூலம் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்காக சமர்பிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச பெறுமதி
3000 டொலர்கள் வரையான பெறுமதி கொண்ட இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்களை இவ்வாறு விற்பனைக்கு சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற போதும் இதற்கு முன்னர் 300 அமெரிக்க டொலர்களாக இத்தொகை வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை முன்னெடுப்பு
கொழும்புக்கு வருகை தராமல் பிரதான தபால் நிலையங்கள் ஊடாக சுங்க பிரிவின் தேவையை நிறைவு செய்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டுள்ளது.
மேலும், சுங்க பிரிவின் தேவையை நிறைவு செய்த பின்னர் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு வர்த்தகர்களுக்கு வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.