சீனாவிற்கு அடிமை சாசனம் கொடுத்த இலங்கை? அச்சத்தில் அண்டைய நாடு
இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைக்குள் சீனா செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கு என்பது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகின்றது.
சீனா தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தியும் மிரட்டியும் இயலக்கூடிய நாடுகளை கடன்கொடுத்து தனக்கு அடிமையாக்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றது.
இதனால், தமிழகத்திற்கு மிக அண்மையில் இருக்கக் கூடிய வடக்கு மாகாணத்திலும் தனது கால்களைப் பதிக்க சீனா முயற்சிக்கின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் என்பது இலங்கையிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தலாம்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
