இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
பொய்யான தகவல்கள்
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
