நாட்டில் சில இடங்களில் வழமைப்போல் இயங்கும் தனியார் பேருந்துகள்
பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்து.
இதனால் இன்று (23) காலை வெளி பிரதேசங்களில் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை நிறுத்தி நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
எனினும் நுவரெலியாவில் வழக்கம் போன்று பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

தனியார் பேருந்து சேவைகள்
இதேவேளை, இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கிவருகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நன்மை கருதி தொடர்ந்து சேவையினை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்துவருகின்றது. மட்டக்களப்பிலிருந்து தூர இடத்திற்கான சேவைகளும் குறுந்தூர சேவைகளும் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தனியார் பேருந்துகளுக்கும் உள்ளபோதிலும் மக்களின் நன்மை கருதி சேவைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் தமது நிலைமையினை கருத்தில்கொண்டு தமக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலதிக தகவல்-குமார்
கல்முனை
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து குறுகிய நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளாது வழமை போன்று இன்று தத்தமது சேவைகளை முன்னெடுத்திருந்தது.
மேலும் அம்பாறை நகரப்பகுதியில் தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு உறுதி
பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.

இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பேரூந்துகளும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல்- பாரூக் ஷிஹான்





அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri