எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதில் அதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கை (Video)
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும் செயற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் குதித்த அதிபர்
இந்த நிலையில் கடமைக்கு செல்ல எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற குறித்த பெண் பதில் அதிபர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவ்விடயம் குறித்து பதில் அதிபர் கருத்து தெரிவிக்கையில், ”கடமைக்கு செல்ல வந்த என்னை தரக்குறைவாக பேசுகின்றனர். கல்வி வேண்டாம், பெட்ரோலே வேண்டும் என்கின்றனர்.
ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்கள் இல்லை. உங்கள் பிள்ளைகளிற்கே கல்வியை புகட்டுகின்றோம். இவ்வாறு சென்றால் பிள்ளைகள் முதல் எழுத்து கூட அறியாதவர்களாக வளர்வார்கள்.
எங்களிற்கு முறையான எரிபொருள் கிடைக்க வேண்டும். இல்லையேல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. நாகரீகமின்றி தரக்குறைவாக பேசுமளவிற்கு ஆசிரியர்கள் இல்லை. இதற்கு நியாயமான தீர்வு வேண்டும்.
அதுவரை ஆசிரியர்கள் பணிக்கு செல்லாது போராட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் தொழிற்சங்கத்திற்கு அறிவித்துள்ளேன். நிரநதரமான தீர்வு கிடைக்க வேண்டும். எமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
குறித்த பெண் பதில் அதிபருடன் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்துரையாடி போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தனர். நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கூறி போராட்டம் கைவிடப்பட்டதுடன், குறித்த பதில் அதிபர் பாடசாலை கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
இவ் விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்து உள்ளது.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலை எல்லோருக்கும் பொதுவானது.
ஆனால் ஆசிரியர்களின் கடமையும் அவர்கள் ஆற்றும் பணியும் வித்தியாசமானது. இந்த நிலையில் எரிபொருளுக்காக ஆசியர்களைக் காக்க வைப்பதும் அவர்களோடு அநாகரிகமாக நடந்து கொள்வதனையும் ஏற்க முடியாது.
சமூகத்தில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கல்வியூட்டி அவர்களைப் பெரியவர்களாக்கும் ஆசிரியர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவமானப்படுத்துவமும் புறக்கணிப்பதும் அநாகரிகமானது.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும். கைகூப்பி வணங்கவேண்டிய ஆசிரியர்களை கைகாட்டி மெருட்டும் அளவிற்கு வைக்காதீர்கள்.
அது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாகும். இத்தகைய நிலை தொடருமாக இருந்தால் ஆசிரிய பணியில் இருந்து ஒதுங்கவேண்டிய நிலை ஏற்படும். இன்று கிளிநொச்சியில் ஒரு ஆசிரியை விட்ட கண்ணீர் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் விட்ட கண்ணீருக்குச் சமமானது” என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022