தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி! எரிபொருள் நிரப்புநிலையங்களில் ஏற்படும் அமைதியின்மை(Photos)

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Thirumal Jun 22, 2022 04:20 PM GMT
Report

தலவாக்கலை 

தலவாக்கலை நகர மத்தியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்து, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்தவர்களால் இன்று (22) அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், தமக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, சிலர் உரிமையாளரை கடந்த வாரம் திட்டிய சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் எரிபொருள் வரிசைகளில் நிற்பவர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் பற்றாக்குறை

தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி! எரிபொருள் நிரப்புநிலையங்களில் ஏற்படும் அமைதியின்மை(Photos) | Sri Lanka Fuel Crisis

மேலும், தலவாக்கலையில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை என்றும் தலவாக்கலை நகரில் உள்ள வாகனங்களுக்கு எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்படுவதில்லை என்றும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருளுக்காக அட்டன் - தலவாக்கலை, தலவாக்கலை - பூண்டுலோயா வீதியில் வாகனங்கள் எரிபொருளுக்காக நிறுத்தி வைக்கப்படுவதால், நகர மத்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக போக்குவரத்து பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் இடையில் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுகம் அருகிலுள்ள கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வேளை பொதுமக்களால் எரிபொருள் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது.

இச் சம்பவத்தின் போது உடனடியாக பொலிஸார் வரவழைக்கப்பட்ட பின்னர் நால்வர் கைது செய்யப்பட்டுஅவர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் பொலிஸாரால் ஒருவர் மட்டும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரை பொலிஸ் நிலையத்தில் எச்சரித்து விடுதலை செய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 11:00 மணிக்கு பின்னர் ஐவரின் வாகனங்கள் மற்றும் கொள்கலன்களில் டீசல் நிரப்பி அனுப்பிக் கொண்டிருந்ததை அறிந்த மக்கள் குறித்த எரிபொருள் நிலையத்தை முற்றுகையிடப்பட்டு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளோ அல்லது சட்ட நடவடிக்கைகளோ இடம் பெறாமல் தடுக்கும் வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏழு கொள்கலன் டீசலும் பருத்தித்துறை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி! எரிபொருள் நிரப்புநிலையங்களில் ஏற்படும் அமைதியின்மை(Photos) | Sri Lanka Fuel Crisis

யாழ்ப்பாணம்

பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்தவர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு எரிபொருள் இல்லை என முகாமைத்துவத்தால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எரிபொருள் கிடங்கை அளந்து காண்பிக்குமாறு போராட்டக் காரரால் கோரப்பட்ட நிலையில் இருப்பு காண்பிக்கப்பட்டது. இருப்பு இல்லாத நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது குறித்த போராட்டம் சுமார் 30 நிமிடங்கள்வரை வீதியை மறித்து இடம் பெற்றது.

தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி! எரிபொருள் நிரப்புநிலையங்களில் ஏற்படும் அமைதியின்மை(Photos) | Sri Lanka Fuel Crisis

மந்திகை எரிபொருள் நிலையம்

தொடர்ந்து மந்திகை எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெற்றது. பிற்பகல் 5 மணியளவில் சுமார் ஆயிரம் பேர் வரை தமது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சதிதம் வருகை தந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகைதந்த பருத்தித்துறை பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால் போராட்டத்தை கைவிடுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுத்த நிலையில் அவர்களால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் தாம் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக ஆயிரம் லிட்டர் பெட்ரோலுக்கு அதிகமாக இருந்தால் அதிகமாக இருக்கின்ற பெட்ரோலை தமது வாகனங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பெட்ரோல் இருப்பு அளவீடு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி! எரிபொருள் நிரப்புநிலையங்களில் ஏற்படும் அமைதியின்மை(Photos) | Sri Lanka Fuel Crisis

அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் நீண்ட நேரமாக சம்மதிக்காத நிலையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வீதியை மறித்தும் எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரின் சமரச பேச்சுக்களின் அடிப்படையில் எரிபொருள் அளவு காண்பிக்கப்பட்டது.

அங்கு ஆயிரத்து 700 லிட்டர் பெட்ரோல் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. இந்த நிலையிலும் மேலதிக எரிபொருளை விநியோகிக்க எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவத்தினர் மறுப்பு தெரிவித்து எரிபொருள் நிலையத்தை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் அங்கு காத்திருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை ஒன்பது மணியிலிருந்து பத்து முப்பது மணி வரை டீசல் விநியோகம் இடம்பெற்றது.

இதில் ஒவ்வொருவருக்கும் தலா 15 ரூபா பெறுமதியான டீசல் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தமக்கு வேண்டிய அளவில் வேண்டியவர்களுக்கு டீசல் விநியோகிக்கப்பட்டது என போராட்டத்தில் தெரிவித்து அங்கு காத்திருந்தவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில் அவர்களால் அளவு டீசலில் இருப்பு அளவை காண்பிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இருப்பு காண்பிக்கப்பட்டதன் அடிப்படையில் சுமார் 300 லிட்டர் வரை அங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இனிவரும் நாட்களில் டோக்கன் அடிப்படையிலேயே டீசல் வழங்கவேண்டும் என்று உடன்பாட்டின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

இன்றைய தினம் 15 ஆயிரம் ரூபாவிற்கு டீசல் வழங்குவது என மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீர்மானிக்கப்பட்டும் 22 ஆயிரம். 25 ஆயிரம் பெறுமதிக்கு தமக்கு வேண்டியவர்களுக்கு டீசல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US