எரிபொருள் விநியோகம் : இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்
கியு. ஆர் அட்டை வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து தகுந்த நிர்வாக முடிவுகளை எடுக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதவிலே இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று காலை இலங்கை பெட்ரோலிய சேமிப்பு கொலன்னாவ முனையத்தில் நடைபெற்றது இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2) Instructions was given to CPC to take appropriate management decisions on the fuel stations not adhering to the guidelines. Fuel distribution to essential services, public transport, fisheries sector, agricultural requirements, industries, tourism was also reviewed & discussed
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 13, 2022
அத்தியாவசிய சேவைகள்
இக் கூட்டத்தில் ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் கியு.ஆர் அட்டை அமைப்புடன் வழங்கப்படும் எரிபொருளின் அளவு பற்றிய தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.
அத்தியாவசிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, மீன்பிடித் துறை, விவசாயத் தேவைகள், தொழில்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாமலுக்கு புதிய பதவி! கோட்டாபயவும் பசிலும் பதவி வேண்டாம் என்று அறிவிப்பு |