பலசரக்கு கடையில் டீசல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது (Photos)
மட்டக்களப்பு நகர் கல்முனை வீதியிலுள்ள பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமாக டீசல் வியாபாரத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரின் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
120 லீட்டர் டீசல் மீட்பு
இதன்போது 120 லீட்டர் டீசல், 80 தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை மீட்டுள்ளதாகவும் மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதைபொருள் மற்றும் மதுபான ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் பொலிஸ் சாஜன் ரி.கிருபா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு பலசரக்கு கடையை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
