எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு மூன்று சதவீத தள்ளுபடியில் 18 சதவீத வட் (VAT) வரியை நடைமுறைப்படுத்தியுள்ளமை பெரும் சுமையாக இருப்பதாகவும் தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் எனவும் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தடை
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இலாபமின்றி வட் (VAT) செலுத்துவது, நாடு முழுவதும் உள்ள 60 சதவீத எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எங்கள் கருத்துக்களை கேட்கத் தவறினால், நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்.
இது தொடர்பில் CPC, Sinopac, IOC, மற்றும் RM Parks (Private) Limited உட்பட அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம்.
இதன்படி கடந்த 11 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்தோம்.
சட்டவிரோதமானது
ஆனால் ஒரு பொறுப்புள்ள சங்கமாக, நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக ஏப்ரல் 20 ஆம் திகதி வரை தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்தோம்.
CPC எங்கள் கவலைகளைக் கேட்கத் தவறினால், நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வருவோம்.
நாடு முழுவதும் உள்ள 60 சதவீத எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களையும் எச்சரிக்க எங்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
VAT செலுத்த அவர்கள் தயாராக இருந்தபோதிலும், இந்த தள்ளுபடியில் VAT விதிக்கப்படுவது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.