ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானம் வெளியானது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், ஒரு பிரிவு உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியைப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நிறைவேற்று சபையின் 90% பேரின் இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி
இதற்கமைய, சு.கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 14 உறுப்பினர்களில் 08 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான வலையமைப்பு ஏற்கனவே செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |