தென்கொரியாவில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு
தென்கொரியாவில் தொழில் வாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் இன்று (21) அந்நாட்டுக்கு செல்லவுள்ளனர்.
இன்றைய தினம் சுமார் 80 பேர் தென்கொரியா செல்லவுள்ள நிலையில், அவர்கள் ஏற்கனவே தங்கள் சேவைக்காலத்தை முடித்துவிட்டு நாடு திரும்பி மீண்டும் அதே இடங்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004 இல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனிதவள திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளை பெற்ற 800 வது குழுவாகும்.
அந்நாட்டு மீன்பிடித்துறையில் வேலைவாய்ப்பு பெற்ற 52 பேர் நேற்று தென்கொரியா புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
உற்பத்தித் துறையில் பணிபுரியும் இலங்கையர்கள்
01 ஜனவரி 2023 முதல் 20 ஜூன் 2023 வரை 3,354 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.
அவர்களில் 2585 பேர் கொரிய மொழி புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்குச் சென்றவர்கள், மேலும் 769 பேர் நிர்ணயிக்கப்பட்ட சேவைக் காலத்தை முடித்துவிட்டு அதே இடத்தில் பணிக்குச் சென்றவர்கள்.
தென் கொரியாவில் இலங்கையர்கள் பெரும்பாலும் உற்பத்தித் துறைகளிலேயே பணிபுரிகிறார்கள்.
அவர்களின் எண்ணிக்கை 2,804 ஆகும். மீன்பிடித் துறையில் 397 பேரும், கட்டுமானத் துறையில் 36 பேரும், விவசாயத் துறைக்கு 2 இலங்கையர்களும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |