சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு - உடன் நடைமுறைக்கு வரும் தடை
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெண்கள் துன்புறுத்தப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும், வேலை கிடைக்காமல் தொலைந்து போவதாகவும் வெளியான தகவல்களை அடுத்து பணியகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெண்களுக்கு தடை
அதற்கமைய, டுபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திறமையற்ற வேலைகளுக்கான சுற்றுலா விசா மூலம் பெண்களை பணியமர்த்துவது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் மூலம் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களை பதிவு செய்வதற்கான அனுமதியும் விசேட அறிவுறுத்தலின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
You may like this video..