மதிய உணவுப் பொதி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் விலை
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, மதிய உணவுப் பொதி மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய சிற்றுண்டிப் பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
