கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்ட திரிபோஷா சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித அச்சமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திரிபோஷா
திரிபோஷா தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித் தாய்க்கும் தேவையற்ற அச்சம் இருக்க வேண்டாம் என குடும்ப சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அஃப்லாடொக்சின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட திரிபோஷா பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் கிளினிக்குகளில் வழங்கப்படும் திரிபோஷாவை பயன்படுத்த முடியும் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கையிருப்பு அழிப்பு
மூன்று மாதங்களுக்கு முன், திரிபோஷா நிறுவனம் வெளியிட்ட திரிபோஷா கையிருப்பில் அஃப்லாடொக்சின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது.
அஃப்லாடொக்சின் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட திரிபோஷாவின் கையிருப்பு தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சும் திரிபோஷா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளன.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

அடுத்தவர் வாழ்வை நாசமாக்க.... சிம்புவுடனான உறவு பற்றி திருமண வீடியோவில் மனம் திறந்த ஹன்சிகா News Lankasri
