உணவு பணவீக்கத்தில் மோசமான சாதனையை பதிவு செய்த இலங்கை
இலங்கையில் கடந்த மாதத்தில் உணவுத் துறையில் பணவீக்கம் 93.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ஸ்ட் மாதத்தில் முட்டை, பிஸ்கட், கோழி, பாண், மீன், பருப்பு மற்றும் பழங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
உணவு பணவீக்கம்
முந்தைய மாதமான ஜுலையில் உணவுத் துறையில் பணவீக்கம் 90.9 சதவீதமாக இருந்த நிலையில் ஒகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் இந்தப் பணவீக்க நிலைமை ஒரு சாதனையாகும்.
மோசமான சாதனை
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் உணவுத் துறையில் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
உணவு தொடர்பான பணவீக்கம் 93.7 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 50.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.