சிறிலங்கன் எயார்லைன்ஸின் பிரச்சினைகளை மறைக்க நிமல் சிறிபால டி சில்வா முயற்சி
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உண்மையான பிரச்சினையை மறைக்க முயற்சிப்பதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டானது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர,
''இந்த வாரத்தின் ஐந்து நாட்களுக்குள் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
உண்மையான பிரச்சினை

ஜூன் 18 முதல் 22 வரை 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. 80 விமானங்களுக்கு விமானிகள் இல்லை.
இதன் காரணமாக விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள் அருகிலுள்ள விருந்தகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.'' என தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
மேலும், இதற்காக இலட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்க நேரிடும் எனவும் எயார்லைன்ஸின் உண்மையான பிரச்சினையை மறைப்பதற்கு அமைச்சர் முயற்சிப்பதாகவும், இதன் மூலம் விமான சேவையை விற்பனை செய்யும் சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri