கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுக்கும் பிரச்சினைகள்
கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் பாதிப்படைகின்றது.
அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தின் மத்தியில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை இந்த சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுருக்குவலை கடற்றொழில் பயன்பாட்டால் மீன்களின் இனப்பெருக்கமும் அதன் வளர்ச்சியும் பாதிப்படைகின்றது. எனவே சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த கடற்றொழில்த்துறை அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் சின்ன மோகன்.
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri