திருகோணமலை கடற்றொழிலாளர்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாக விசனம் (Video)
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் அரசினால் பல வகைகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து மனு ஒன்றில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அகில இலங்கை பொது கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்பாடானது,
சிறு படகு கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
திருகோணமலை கடற் பகுதிகளில் சிறு படகுகள் மூலம் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருபவர்களுக்காக மானியத்தொகை ஒன்று, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் மாதாந்தம் 15,000/= ரூபா வீதம் 3 மாதங்களுகான கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த கொடுப்பனவானது சில காரணங்களின் நிமித்தம் இன்னமும் பலருக்கு வழங்கப்படவில்லை என்பதனை மேற்கோள்காட்டி முன்னெடுக்கப்பட்டது.
மனு
குறிப்பாக திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் இயந்திரம் இல்லா படகுகளில் மீன்பிடிப்பவர்கள் பட்டியலில் 1758 கடற்றொழிலாளர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் 783 கடற்றொழிலாளர்களுக்கு மாத்திரமே குறித்த தொகையானது வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக பல கடற்றொழிலாளர்கள்
புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக
குறித்த கோரிக்கைகள் அடங்கிய கையெழுத்திடப்பட்ட மனு ஒன்று சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிமித்தமாக அனைத்து பகுதிகளை சேர்ந்த
கடற்றொழிலாளர்களாலும் ஒப்பமிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b51ac36f-7e25-46c2-9037-c54b8d787989/22-633c3a7c398ef.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a3440969-8379-4a3d-a66b-6736fa4e80ed/22-633c3a7c77922.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/739359bb-6e64-43fe-9b41-a8c0ec9544d1/22-633c3a7cb21fc.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3be3ee93-4c32-4c82-8eb5-6d72ba759f03/22-633c3a7cf2cdb.webp)
![கிளீன் தையிட்டி..!](https://cdn.ibcstack.com/article/0cf0c8c5-ad68-4e31-841a-7e29cf4596c2/25-67b1e86bd37bd-md.webp)