ஒளி பாச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை! மீறினால் சட்ட நடவடிக்கை
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு கடற்பரப்பில் சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மின் ஒளி பாச்சி மீன் பிடிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து நேற்றையதினம் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய கண் வலைகளைப் பயன்படுத்த தடை
நீண்டகாலமாக தமது பகுதி கடற்பரப்பில் குறித்த கடற்றொழில் நடவடிக்கையை சில தொழிலாளர்கள் முன்னெடுத்து வருவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டிவரும் கடற்றொழில் சங்கங்கள் அதனை தடைசெய்யுமாறு வலியுறுத்தி வந்திருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கும் கொண்டுசென்றிருந்தனர்.

சட்ட நடவடிக்கை
குறித்த கலந்துரையாடலில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணக்கம் தெவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முதல் குறித்த தொழில் நடவடிக்கைகள் தடை
செய்யப்படுவதுடன் அதனை மீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாலர்கள்
மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மட்ட கூட்டத்தில்
அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri