விடுதலைப் புலிகளின் தலைவர் போராடியது ஏன்..! நீதி அமைச்சர் விளக்கம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு வேறு நிலைப்பாடுகளில் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் தான் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்ததாகவும், இதன்போது அங்குள்ள மக்கள் தமிழ் மற்றும் அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளைத் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்து கொண்டதாகவும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அல்ல எனவும் அவருக்கு முன் இருந்த சில தரப்பினர் அதனை ஆரம்பித்து வைத்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சிங்கள மக்களைக் கொலை செய்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிறக்கவில்லை எனவும் வடக்கில் காணப்பட்ட அதிகார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே அவர் முன் வந்தார் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




