ஒரே நேரத்தில் இரு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை! ஐ.நா பிரதிநிதி
கோவிட் வைரஸ் பரவல் மற்றும் கடற்சூழல் மாசடைவு ஆகிய இரு சவால்களையும் இலங்கை ஒரே நேரத்தில் எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதிலிருந்து மீள்வதற்கு அனைத்துத்தரப்பினரும் உதவமுன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இலங்கை தற்போது கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் மற்றும் கடற்பரப்பில் ஏற்பட்ட அனர்த்தம் ஆகிய இரு சவால்களையும் ஒரேநேரத்தில் எதிர்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னடைவிலிருந்து இலங்கையர்கள் மீட்சிபெறவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை இந்த அனர்த்தத்தின் விளைவாகக் கடற்பிராந்தியத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அனைத்துத் தரப்பினரும் விரைந்து முன்வரவேண்டும்.
#SriLanka faces both the pandemic & a marine disaster on its shores. I look to the resilience of Sri Lankans and call on all partners to extend immediate support – from specialized equipment to gauging impacts on coastal communities and marine life. More: https://t.co/ANtIYQrRkQ https://t.co/hNDtyAOWlB
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) June 5, 2021
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam