சுவிஸ் தீ விபத்து தொடர்பில் இலங்கை இரங்கல்
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொண்டானா பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததுடன், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததையும் அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு மற்றும் மக்களின் சார்பில், தங்களின் உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ஹேரத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், அவர் இந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வலிமையும் விரைந்து நலமடையும் அருளும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடினமான தருணத்தில், சுவிட்சர்லாந்து அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கையின் முழுமையான ஆதரவு தொடர்ந்தும் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம் News Lankasri