சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கும் இலங்கை
விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்குகளை மாற்றியமைக்க இலங்கை முயற்சிக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் சர்வதேச குழு ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ள போது இது தொடர்பான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு வரவுள்ள சர்வதேச நாணய நிதியக்குழு
48 மாத நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து விவாதிக்கவே சர்வதேச நாணய நிதியக்குழு இந்த மாதம் இலங்கைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளி போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக, இலக்குகளை திருத்த வேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam