இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - குறைக்கப்படும் மின்சார கட்டணம்
மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் அலகுகளுக்கான கட்டணம்
கட்டணக் குறைப்பிற்கமைய, 0 முதல் 30 மின் அலகுகளுக்கான கட்டணம் 26.9 சதவீதம் குறைக்கப்படும். மேலும், 31 முதல் 60 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 10.8 சதவீதமும், 61 முதல் 90 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 7.2 சதவீதமும், 91 முதல் 180 மின் அலகுகளுக்கான மின் கட்டணம் 3.4 சதவீதமும் குறைக்கப்படவுள்ளது.
இது தவிர, 180 மின் அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவின் கட்டணம் 1.3 சதவீதம் குறைக்கப்படும். மத ஸ்தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் சுமார் 3.2 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சாலைகள், பொதுப்பிரிவுகள், தெருவிளக்குகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வகைக் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஹோட்டல் தொழில்துறையின் மின்சாரக் கட்டணம் 12.6 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam