மின்சார விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்வரும் வாரத்தில் தொடர் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் அறிவித்துள்ளார்.
பராமரிப்பு நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்ட மின் தடைகள் குறித்த சர்வதேச அளவுகோல்களுடன் மின்சார சபை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
மின்சார விநியோகம்
மின்சார விநியோகம் அடிக்கடி இடைநிறுத்தப்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மீளாய்வு செய்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதி நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளும் அமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது.
மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக மின்சார சபை பெருமளவிலான பணத்தை செலவிடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
