ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படும்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் -செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத மக்களின் வீடுகளில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை என சிலோன் பவர் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மக்களை மேலும் ஒடுக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால் அதனை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒட்டுமொத்த மக்களுடன் இணைந்து முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,