இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டரின் பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் இன்று (23.10.2022) தேசிய அமைப்பில் இணைக்கப்படவுள்ளது.
மூன்றாவது ஜெனரேட்டரை நிறுத்த திட்டம்
அதன்படி, ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் 270 மெகாவாட் மின்சாரம் படிப்படியாக தேசிய அமைப்பில் சேர்க்கப்படும்.
இரண்டாவது ஜெனரேட்டரை தேசிய அமைப்பில் இணைத்த பின்னர், பராமரிப்பு நோக்கங்களுக்காக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.