ஜனாதிபதி தேர்தலை மையமாக கொண்டு திரைமறைவில் பல திட்டங்கள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இருவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை தோன்றினால் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் ஒருவரை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து வேறுபாடுகள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இதற்கான பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது இந்த அமைச்சர்களது நிலைப்பாடாக உள்ளது எனவும், அந்த சந்தர்ப்பத்தை தட்டி பறிப்பதன் ஊடாக தமக்கு ஆதரவான ஒருவரை பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வேட்பாளராக களமிறக்க முடியும் எனவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், பொதுஜன பெரமுனவுடான கருத்து வேறுபாடுகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதற்கு சம்மதிக்கமாட்டார் என்றே அறியமுடிகின்றது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி என்று ஐக்கிய தேசிய கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
