தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சார்ள்ஸ் பங்கேற்கவில்லை என தகவல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எம்.எஸ்.சார்ள்ஸின் பதவி விலகலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளாத போதும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகப் பல தரப்பும் குற்றம் சுமத்தும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
பதவி விலகலை ஏற்காத ரணில்
ஆனாலும், அவரது பதவி விலகலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் உறுப்பினர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
எனினும் ஏனைய 4 உறுப்பினர்களும்
பங்கேற்றிருந்ததாக தெரியவருகிறது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
