கல்விப் பாடத்திட்டத்தில் புதிய நடைமுறை : நவீனமயப்படுத்தப்படும் வகுப்பறைகள்
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக் (Mr. Puneet chandok),புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.












தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
