ரணிலின் சூழ்ச்சியில் சிக்கிக் கொண்ட அநுர தரப்பு
அநுர அரசாங்கம் சாதாரண மக்களுக்கு எதிரான திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றதாக ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சுவஸ்திகா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மேல்தட்டு வர்க்கத்தினருக்கு சார்பாகவும், அவர்களது இலாபத்தை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தான் அநுர அரசாங்கம் இந்த கடன் மறுசீரமைப்பை செய்துள்ளது.
மேலும், அநுர அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) செய்த திட்டங்களையே முன்னெடுத்து செல்கின்றது.
அதாவது தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சர்வதேச பிணையாளர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பொழுதே பொருளியலாளர்கள் இது நாட்டிற்கு எதிரானது என எச்சரித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரணிலின் சூழ்ச்சிக்குள் அநுர சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |