மத வழிபாடுகளை கூட செய்ய முடியாத நிலையில் மக்கள்: ஹெக்டர் அப்புஹாமி (Video)
மத வழிபாடுகளை செய்ய முடியாத நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
டிசம்பர் அல்லது நத்தார் மாதத்தில் நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் பண்புடன் வாழ்த்தி வரவேற்ப்பார்கள். டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை கோப தாபங்களை மறந்து இப்படி வாழ்த்திக்கொள்வது வழக்கம்.
ஆனால் இன்று நாட்டில் அப்படி எதுவுமே இல்லை. அந்த நிலை முற்றாக மாறியுள்ளது. நேற்று எனக்கு காணக்கூடியதாக இருந்தது. காலி முகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் ஒரு நத்தார் நிகழ்ச்சி ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது.
இதில் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டார்கள். இந்தநிலையில் ஜனாதிபதி அவர்களுக்கு நான் ஒரு ஆலோசனையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் காலிமுகத்திடலில் நத்தார் நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செயது நடத்தும் அதே வேலை சற்று கிராம புறங்களையும் திரும்பிப் பாருங்கள்.
விளிம்புநிலையில் மக்கள்
விவசாயிகள் பற்றி , மீனவர்கள் பற்றி , தொழிலரகள் பற்றி சாதாரண வியாபாரிகள் பற்றி இவர்கள் அனைவரையும் திரும்பி பாருங்கள். இவர்களுக்கு நத்தார் கொண்டாட்டங்களையோ அல்லது ஒரு சாதாரண வீட்டில் நத்தார் தினத்திற்கு வைக்கப்படும் மாட்டுக்குடிலையாவது செய்து வைப்பதற்கு பொருளாதார ரீதியாக முடியுமா என்று பாருங்கள்.
மக்களுக்கு பொருளாதார ரீதியில் மாத்திரம் அல்ல உள ரீதியாக கூட மக்கள் திருப்தி இல்லாமல் இருக்கின்றார்கள். தங்களுடைய மத வழிபாடுகளை செய்ய முடியாத நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மத வழிபாடுகளை செய்ய செல்ல வேண்டிய நேரத்திலும் கூட வியர்வை சிந்தி உழைக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இல்லையென்றால் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உணவு வகைகளை செய்துகொடுக்க முடியாமல் போகும். அதே போல் இன்று எத்தனையோ பெற்றோர்கள் , பிள்ளைகள் அடுத்த வருடத்திற்கு பாடசாலைக்கு தேவயானை புத்தகங்கள், பைகள், சப்பாத்துகளை வாங்க முடியாமல் கஷ்டத்தில் கவலையில் அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
ஆடைகளை தைத்துக்கொள்ள வழியில்லாமல் இருக்கின்றர்கள். ஆகவே இப்படியொரு நிலையில் நீங்கள் நத்தார் கொண்டாட்டங்களை பணம் செலவழித்து செய்கின்றீர்கள். ஆனால் அவ்வாறான நிகழ்வுகளில் நாட்டு மக்களும் ஏதோ ஒருவிதத்தில் கலந்து கொள்ளும் வகையிலும் நிகச்சிகளை செய்யுமாறு நான் ஜனாதிபதியிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றார்.