இலங்கை குடும்பங்கள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையின் தற்போதைய நிலவரப்படி கடந்த மாதங்களை விட ஒரு குடும்பத்தின் மாத செலவிற்காக தேவைப்படும் பணத் தொகையின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 75,000 முதல் 90,000 ரூபாய் வரை செலவழிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் வெளியான தகவல்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சமூக குழுக்களை முன்வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ இந்த கணக்கெடுப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதிகரித்துள்ள மாதச் செலவு
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த துல்லியமான தரவுகளை பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் கலாநிதி சமல் சஞ்சீவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த மாதம் ஒரு நபரின் குறைந்தபட்ச மாதச் செலவு 8,923 ரூபாயிலிருந்து 12,444 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.