இலங்கையில் இருந்து தப்பிச் செல்லும் ராஜபக்ஷர்களின் சதித்திட்டம் அம்பலம்
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகமொன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இரண்டு கொள்கலன்களைப் பயன்படுத்தி இந்த அலுவலகம் அமைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க பிரதிநிதியான ஜெப்மா என அழைக்கப்படும் சந்திமாவினால் இந்த அலுவலகம் திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக விமான நிலைய அதிகாரசபை 93 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறானதொரு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன் தற்போது நிதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பாதுகாப்பான இடமாக இதனை பயன்படுத்தவுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
