உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை
உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 17.50 வீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம் மிக உச்சத்தை இந்த மாதம் பதிவு செய்துள்ளது. அதற்கமைய கடந்த 21ஆம் திகதி வெளியான பட்டியலுக்கு அமைய இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 119 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஸ்டீவ் ஹான்கே இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த வார பணவீக்க அட்டவணையில், இலங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதியன்று, நான் இலங்கையின் பணவீக்கமான 119 சதவீத்தை வான் அளவு உயர்வாக கூறினேன்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் ரூபாயை சேமிக்க, இலங்கை 1884 முதல் 1950 வரை இருந்ததைப் போன்ற ஒரு நாணய சபையை நிறுவ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
In this week's inflation table, #SriLanka is in the spotlight again. On April 21, I measured LKA's #inflation at a SKY-HIGH 119%/yr. To crush inflation & save the rupee, Sri Lanka needs to install a #CurrencyBoard, like the one it had from 1884 until 1950. pic.twitter.com/rM5LlceEmL
— Steve Hanke (@steve_hanke) April 25, 2022